பாகிஸ்தான் அணி தனது சொந்த மைதானத்தில் அடுத்தாக நடைபெற இருக்கும் 25 போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமம் தொடர்பான டெண்டர் கோரியது.
ஆனால், PTV-ஐ தவிர வேறு எந்த நிறுவனமும் டெண்டர் கோரவில்லை. PTV-யும் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு டெண்டர் கோரவில்லை. குறைவான தொகைக்குதான் டெண்டர் கோரியது. வேறு வழியில்லாமல் PTV நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் 600 மில்லியன் ரூபாய்க்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், 350 மில்லியனுக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது. முன்னதாக பல்வேறு நிறுவனங்கள் இணைந்து உரிமம் பெற்றிருந்தது. இதில் சில நிறுவனங்கள் உரிமத்திற்கான முழுத் தொகையையும் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால், கூட்டாக உரிமம் கேட்க அனுமதி வழங்கப்படவில்லை.
பாகிஸ்தான் சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த மாதம் இலங்கை அணிக்கெதிராக 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, இலங்கையுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில விளையாட இருக்கிறது. அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தான் அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் விரக்தி அடைந்துள்ளனர். அதன் காரணமாக விளம்பரதாரர்கள் விளம்பரம் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதுதான் ஒளிபரப்பு உரிமம் தொகை குறைவதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.