இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் -ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.
சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாசிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.
இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் சிறுது நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிதானமாக விளையாடி வந்த வாசிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பும்ரா டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனையடுத்து பொறுப்புடன் விளையாடி வந்த நிதிஷ்குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் அடித்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் படைத்துள்ளார்.
3 ஆம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
What a moment this for the youngster!A maiden Test 100 at the MCG, it does not get any better than this ??#TeamIndia #AUSvIND pic.twitter.com/KqsScNn5G7