கிரிக்கெட்

ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள்.. கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்

2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் இதுவரை நிக்கோலஸ் பூரன் 139 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

மாலை மலர்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் பூரன் 139 சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெயிலின் 9 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் கிறிஸ் கெயில் மட்டுமே 6 இடங்களை பிடித்துள்ளார்.

வீரர் 

சிக்ஸர்கள் 

ஆண்டு

நிக்கோலஸ் பூரன்

139* 

2024

கிறிஸ் கெயில்

135 

2015

கிறிஸ் கெயில்

121 

2012

கிறிஸ் கெயில்

116 

2011

கிறிஸ் கெயில்

112 

2016

கிறிஸ் கெயில்

101 

2017

ஆண்ட்ரே ரஸ்ஸல்

101 

2019

கிறிஸ் கெயில்

100 

2013

க்ளென் பிலிப்ஸ்

97 

2021

கீரன் பொல்லார்ட்

96 

2019