கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் அரையிறுதி கனவு பறிபோனது

நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.பாகிஸ்தான் அணி 56 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

மாலை மலர்

துபாய்:

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்தது.

பின்னர் 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றதால் இந்தியாவின் கனவு பறிபோனது.