ஐ.பி.எல்.

CSK | எம்.எஸ். தோனியை ஓய்வு பெறச் சொல்ல மற்றவர்கள் யார்? யுவராஜ் சிங் தந்தை ஆவேசம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஓய்வு பற்றி பெற மற்றவர்கள் யார்? என்று யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் ஆவேசமாக தெரிவித்துள்ளார்

44 வயதாகும் எம்.எஸ். தோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 44 வயதாகிவிட்டதால், 2026 சீசன் அவருக்கு கடைசி தொடராக இருக்கலாம். சஞ்சு சாம்சனை அணியில் எடுத்திருப்பதால் எம்.எஸ். தோனியின் ஐபிஎல் கிரிக்கெட் முடிவுக்கு வருகிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பேசி வருகிறார்கள்.

மேலும், தோனியை சந்திப்பவர்கள் இது தொடர்பாகத்தான் கேள்வி கேட்கிறார்கள். இந்த நிலையில் எம்.எஸ். தோனியுடன் ஓய்வு குறித்து பேசுவதற்கு மற்றவர்கள் யார்? என்று யுவராஜச் சிங் தந்தை யோக்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக யோக்ராஜ் சிங் கூறியதாவது:-

எம்.எஸ். தோனி இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார். அடுத்த 10 வருடத்திற்கும் அவர் விளையாட வேண்டும். ஏனென்றால், சரியான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்போடு அவருடைய உடற்தகுதியை (Fitness) நிரூபித்துள்ளார். அவரது Forearm-ஐ நான் இப்போதும் பார்க்கிறேன். அமேஷிங் மனிதர். ஓய்வு பற்றி பேச மற்றவர்கள் யார்? அவர்கள் என்ன பெரியவர்களா?. இல்லை. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவருக்கு என் வணக்கம்.

இவ்வாறு யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.