IPL 2026 | சி.எஸ்.கே. அணியில் இணைகிறார் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்

நாதன் எல்லிஸ்க்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பார்ட்மேனை ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
IPL 2026 | சி.எஸ்.கே. அணியில் இணைகிறார் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்
Published on

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. 10 அணிகளும் தொடருக்கு தயாராகி வரும் நிலையில் சில வீரர்கள் காயத்தால் அணியில் இருந்து விலகி வருகிறார்கள். இது அந்தந்த அணிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பார்ட்மேனை ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட உள்ளார். ஒருவேளை சி.எஸ்.கே. ஒப்பந்தம் செய்வது உறுதியானால் அங்கிருந்து விலகுவார். பாகிஸ்தான் சூப்பர் லீக் 26-ந்தேதி தொடங்குகிறது.

ஓட்னியல் பார்ட்மேனுக்கு 33 வயதாகிறது. இவர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளும், டி20-யில் 27 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 114 டி20 போட்டிகளில் விளையாடி 162 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com