ROHIT 
ஐ.பி.எல்.

6வது IPL கோப்பையை கொண்டு வருவோம் - MI ரசிகர்களிடம் உறுதி அளித்த ரோகித்

ரசிகர்களிடம் பேசிய ரோகித் சர்மா, நிச்சயமாக உங்களுக்காக 6வது கோப்பையை கொண்டு வர முயற்சிப்போம்" என்று உறுதி அளித்தார்.

மாலை மலர்

ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் (MI) அணி நேற்று ஜியோ வேர்ல்ட் கார்டனில் 'MI Mix' எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது; இதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது ரசிகர்களிடம் பேசிய ரோகித் சர்மா, நிச்சயமாக உங்களுக்காக 6வது கோப்பையை கொண்டு வர முயற்சிப்போம்" என்று உறுதி அளித்தார்.

மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. இப்போது 6வது கோப்பையை கைப்பற்றுவது தான் அணியின் முக்கிய இலக்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.