IPL 2026 | புதிய கேப்டன்- துணை கேப்டனை அறிவித்த SRH

சன்ரைசர்ஸ் அணியின் இடைக்கால கேப்டனாக அனுபவமிக்க விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2026 | புதிய கேப்டன்- துணை கேப்டனை அறிவித்த SRH
Published on

ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தனது தலைமைப் பொறுப்பில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

ஐதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் இடைக்கால கேப்டனாக அனுபவமிக்க விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு துணையாக, அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா துணை கேப்டனாகச் செயல்படுவார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா

பாட் கம்மின்ஸ் காயத்திலிருந்து மீண்டு வர இன்னும் சில காலம் தேவைப்படுவதால், அவர் குணமடைந்து திரும்பும் வரை இந்த புதிய கூட்டணி அணியை வழிநடத்தும்.

2016-ல் இந்திய 19-வயதுக்குட்பட்டோர் அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் இஷான் கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com