ஐ.பி.எல்.

IPL 2026: 100 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

பவர் பிளேவில் 30 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 229 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி பேட்டிங்கால் உலக சாதனை படைத்தார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 வயதிற்கு முன் 100 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற உலக சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

மேலும், அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த பொல்லார்டின் சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் அவர் அடித்த 3 சிக்சர்கள் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் பவர் பிளேவில் 30 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் 440 ரன்கள் குவித்து மொத்தம் 40 சிக்சர்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் 40 சிக்சர்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.