ஐ.பி.எல்.

ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் சர்ச்சையை கிளப்பிய கிளாசன் அவுட்

கிளாசன் அடித்த பந்தை பில் சால்ட் கேட்பிடித்தபோது பவுண்டரி லைனை டச் செய்தது ரீ-பிளேயில் தெளிவாக தெரிவது போல் இருந்தது.

ஐ.பி.எல். 2026 சீசன் கிரிக்கெட் திருவிழா நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி- RCB) 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சேர்ந்த கிளாசன் 5-வது வீரராக களம் இறங்கினார். அவர் 22 பந்தில் 31 ரன்கள் விளாசினார். ரொமாரியோ ஷெப்பர்டு வீசிய பந்தை தூக்கி அடிப்பார். அதை பில் சால்ட் கேட்ச் பிடிப்பார்.

பில் சால்ட் பவுண்டரி லைனை தொடுவது போல் இருக்கும். 3-வது நடுவர் ரீ-பிளே மூலம் செக் செய்து அவுட் கொடுத்தார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனென்றால் பில் சால்ட் பவுண்டரி லைனை தொட்டது தெளிவாக தெரிவது போல் இருந்தது.

போட்டிக்குப்பின் இதுகுறித்து கிளாசன் கூறுகையில் "நடுவர் முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. பவுண்டரி லைனை தொட்டது தெளிவாக தெரிந்தது. இந்த தவறு ஒட்டுமொத்த போட்டியையும் மாற்றிவிட்டது. இது ஐபிஎல் போட்டியில் எப்படி நடக்க முடியும்?. இது போட்டியின் மொத்த அவமானம்" என்றார்.