ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களம் இறங்கியது. அந்த அணியின் விராட் கோலி உள்பட நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க குருணால் பாண்ட்யா சிறப்பாக விளையாடி 46 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆர்சிபி த்ரில் வெற்றி பெற்றது.
18-வது ஓவரில் குருணால் பாண்ட்யா அடித்த பந்து சிக்ஸ் நோக்கி பறந்தது. அதை மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் திர் பிடிப்பார். அப்போது அவர் நிலை தடுமாறியதால் பவுண்டரி லைனுக்கு வெளியில் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் பந்தை திலக் வர்மாவை நோக்கி போடுவார். ஆனால் திலக் வர்மா அதை பிடிக்க தவறிவிடுவார். நமன் திர் பவுண்டரி லைனை தொட்டது போல் தோன்றியது.
இதனால் குருணால் பாண்ட்யா சிக்சர் என்று நினைத்து ஓடாமல் நின்று விடுவார். ஆனால், நமன் திர் பவுண்டரி லைனை மிதிக்கவில்லை என்று நடுவர் தெரிவிப்பார். இதனால் ரன் வழங்கப்படவில்லை. ஆர்சிபி பயிற்சியாளர் ஆண்டி பிளவர் இதனால் கடுங்கோபம் அடைவார். 4-வது நடுவரை நோக்கி வெளியில் கேட்கும் அளவிற்க ஆபாசவார்த்தையை பயன்படுத்தினார். இதனால் அவருக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.