கிரிக்கெட்

128-லாம் ஒரு இலக்கா!.. மாஸ் காட்டிய ராஜஸ்தான் - மண்ணைக் கவ்விய சென்னை சூப்பர் கிங்ஸ் | IPL 2026

அதிரடி காட்டிய சூர்யவன்ஷி 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஐபிஎல் 2026 சீசனில் கௌஹாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விளையாடின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 127 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர்.

அதிரடி காட்டிய சூர்யவன்ஷி 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வாலும் அரைசதம் அடித்தார். இறுதி வரை நின்று ஆடிய அவர் 38 ரன்கள் ஸ்கோர் செய்தார்

துருவ் ஜூரல் 18, ரியான் பராக் 14 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் 47 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் 128 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் எளிதில் வெற்றி பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT