சூர்யவன்ஷி 
கிரிக்கெட்

IND vs IRE: முதல் டி20 ஆட்டத்தில் களமிறங்குவாரா சூர்யவன்ஷி? - நீடிக்கும் சஸ்பென்ஸ்!

மற்ற வீரர்களுக்கு உண்டான விதிமுறைகளே அவருக்குமானது.

அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஸ்டோர்மொன்ட் மைதானத்தில் இன்று டி20 சர்வதேச தொடர் தொங்க உள்ளது.

இந்தியா - அயர்லாந்து மோதும் முதல் ஆட்டம் இன்று நடைபெறும் நிலையில் இதில் 15 வயதே ஆன இந்தியாவின் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவாரா என்பது தற்போது வரை சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய சூர்யவன்ஷி அதிரிபுதிரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 16 ஆட்டங்களில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தட்டிச் சென்றார். ஒரே சீசனில் 72 சிக்சர்கள் விளாசி கிரிஷ் கயால் சாதனையையும் முறியடித்தார்.

ஐபிஎல்-க்கு முன்னதாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான U-19 ஆட்டங்களிலும் சூர்யவன்ஷி கலக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து டி20 சர்வதேச தொடர் இந்திய அணி வீரர்கள் பட்டியலிலும் சூர்யவன்ஷி பெயர் இடம்பெற்றது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவரது அறிமுகம் நிகழுமா என்ற கேள்விக்கு இந்திய அணியின் பெட்டிங் கேப்டன் சிதான்ஷு கோடக் சுற்றி வளைத்து பதில் சொல்லியுள்ளார்.

நேற்று பெல்பாஸ்டில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தின்பொது பேசிய அவர், சூர்யவன்ஷியின் திறமையை புகழ்ந்ததோடு அவர் மூத்த வீரர்களுடன் எளிதில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறனையும் வியந்தார்.

இன்றைய போட்டியில் அவர் களம் காண்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கோட்டக், "அது குறித்து அணி பின்னர் தீர்மானிக்கும்.

பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் அதுகுறித்து முடிவெடுப்பார்கள். அவர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதால் மற்ற வீரர்களுக்கு உண்டான விதிமுறைகளே அவருக்குமானது.

எல்லாம் வரும்போது அவர் அறிமுகமானார். அது முதல் போட்டியிலா அல்லது அதற்கடுத்த போட்டியிலா என்று சொல்வது கடினம். புதிய வீரர்கள் தங்கள் நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்." என்று தெரிவித்தார் .