கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆப்கானிஸ்தான் 24.5 ஓவரில் 194 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான்

மழையால் ஆட்டம் 25 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 24.5 ஓவரில் 194 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

குர்பாஸ் சதம் விளாசினார். இந்திய அணி சார்பில் குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்தியா

அடுத்து களமிறங்கிய இந்தியா சார்பில் ரோகித் சர்மா பேட்டிங் இறங்கி 16 ரன்னில் அவுட் ஆனார். கில் - கிஷன் இருவரும் சிறப்பாக ஆடினர்.

கிஷன் 34 ரன்களில் வெளியேற கில் அரசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். ராகுல் 39 எடுத்தார். 22.5 ஓவர்ககள் முடிவில் இநதிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.