

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. மழையால் ஆட்டம் 25 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 24.5 ஓவரில் 194 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. குர்பாஸ் சதம் விளாசினார். இந்திய அணி சார்பில் குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. 3-வது ஓவரை அஸ்மதுல்லா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை ரோசித் சர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 16 ஆயிரம் ரன்களை கடந்தார். அதுவும் 384 போட்டிகளில் கடந்துள்ளார். இதன்மூலம் டேவிட் வார்னர் சாதனையை முறியடித்துள்ளார். இந்த போட்டியில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
டேவிட் வார்னர் 390 போட்டிகளில் தொடக்க வீரரான 16 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். கிரோம் ஸ்மித் 392 போட்டிகளிலும், சேவாக் 393 போட்டிகளிலும், கெய்ல் 415 போட்டிகளிலும், டெஸ்டாண்ட் ஹெய்ன்ஸ் 435 போட்டிகளிலும், சனத் ஜெயசூர்யா 449 போட்டிகளிலும் தொடக்க வீரராக 16 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.