இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் லார்கன் டக்கர் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார்.
5வது விக்கெட்டுக்கு ஜார்ஜ டாக்ரெல், கரேத் டெலானி ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக டெலானி 17வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்தார்.
டெலானி 32 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும், ஷிவம் துபே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.