கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா வெற்றிபெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்

இந்தியா சார்பில் ராதா யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் உள்ளன.

இந்திய அணி பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுடன் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இந்திய அணி இன்று வங்கதேசம் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது. ஜூரையா பெர்டோஸ் 33 ரன்னும், நிகர் சுல்தானா 32 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டும், ஸ்ரீசரணி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.