கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையைத் தகர்த்து 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் இந்திய அணிக்காக மிகக் குறைந்த வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனை சூர்யவன்ஷி வசம் சென்றுள்ளது.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமான சாதனையைச் சச்சின் டெண்டுல்கர் பெற்றிருந்தார். அவர் தனது 16 வயது 205 நாட்களில் இந்திய அணிக்காகக் களம் இறங்கினார்.
தற்போது அந்த சாதனையை மாற்றியமைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, சரியாக 15 வயது 99 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்து அசத்தியுள்ளார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 191 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 14 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார்.