ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், பி அணியை அனுப்பி வைக்கலாமா? என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், பி அணியை அனுப்பி வைக்கலாமா? என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ACC கூட்டத்தின்போது ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளிடம் நாங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்தோம். அதாவது, உடை மாற்றும் அறைகள் கூடாரங்களில் அமைக்கப்பட்டிருந்தன மற்றும் கழிவறைகள் அந்தக் கூடாரங்களிலிருந்து 500மீ தொலைவில் இருந்தன. இது வீரர்களுக்கு அதிருப்தி அளிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், ஹோட்டல் அறைகள் மிகவும் சிறியதாக இருப்பதும் ஒரு பெரிய கவலையாக உள்ளது என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
2023-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றன.
ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீ.), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (வி.கீ.), ஷிவம் துபே, திலக் வர்மா (துணைக்கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, பும்ரா.
இந்திய பெண்கள் டி20 அணி:-
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (வி.கீ.), ஜி. கமாலினி (வி.கீ.), பாரதி புல்மாலி, ஸ்ரீ சாரணி, ரேனுகா தாகூர், கிராந்தி காட், அருந்ததி ரெட்டி, ஷ்ரேயங்கா பாடீல், ராதா யாதவ், நந்தி ஷர்மா.