டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது: சுப்மன் கில்

இந்திய அணியின் வெற்றியை இலங்கை வீரர் சோனல் தினுஷா சிறப்பாக விளையாடி தடுத்தார்.
shubman gill
Published on

பரிசளிப்புக்கு பின் பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட் வென்றுள்ளது என தெரிவித்தார்.

டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா

இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது.

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றியை இலங்கை வீரர் சோனல் தினுஷா சிறப்பாக விளையாடி தடுத்துவிட்டார்.

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசியதாவது:

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எந்த மாற்றத்தையும் செய்திருந்தால் கூட மூலம் இந்த போட்டியில் நிச்சயம் வென்று இருக்க முடியாது. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக பல ஓவர்களை நாங்கள் வீசி களத்தில் இருந்தோம். எங்களால் செய்ய முடிந்ததை செய்து விட்டோம்.

இலங்கை வீரர்கள் பிரமாதமாக விளையாடினார்கள். அந்த அணியின் பேட்டர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டினார்கள். கொஞ்சம் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு உதவியது.

இந்தத் தொடர் எங்களுக்கு பல நல்ல விஷயங்களை தந்து இருக்கிறது. நாங்கள் இலங்கை அணியிடம் இருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம்.

பாலோ ஆன் நெருக்கடியில் இருந்து மீண்ட இலங்கை

பாலோ ஆன் பெற்று கடும் நெருக்கடியில் இருந்து, அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை பாராட்ட வேண்டும்.

எங்கள் அணியின் படிக்கல், மானவ் சுதார், ராகுல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக செயல்பட்டார்கள்.

சிறப்பாக பந்து வீசிய மானவ் சுதார்

மானவ் சுதார் செயல்பட்ட விதம் என்னைக் கவர்ந்தது. அவர் சிறப்பான முறையில் பந்து வீசி வருகிறார். அவர் பந்தை வீசும் விதமும் அதற்கு அவர் கை மற்றும் மணிக்கட்டை எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி அவர் எங்களின் மிகவும் முக்கிய ஒரு பவுலராக இருக்கப் போகிறார்.

அடுத்ததாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து செல்ல இருக்கின்றோம். அது எங்களுக்கு ஒரு நல்ல தொடராக இருக்கும் என நினைக்கின்றோம். அதன் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் இருக்கின்றது.

நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

பாலோ ஆன் வழங்கியபோது அதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வெற்றி தோல்வி எங்களுக்கு இல்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com