நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, டி20 போட்டியை தொடர்ந்து ஐந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று வில்லிங்டன்னில் உள்ள ஹென்ரி மைதானத்தில் காலை 7:30 மணிக்கு இரண்டாவது ஒரு நாள் போட்டி தொடங்கியது.
இரண்டாவது ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதால், 50 ஓவர் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சும்பன் கில், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வில் யங், டிம் செஃப்ரட், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் சோபிக்காமல் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் அகுப் நபி மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வேகப்பந்து பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணி 25 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 74 ரன்களை எடுத்து தடுமாறி விளையாடி வருகிறது.
வில் யங், டிம் செஃபர்ட், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, பிளேர் டிக்னர்
ரோஹித் ஷர்மா. சுப்மன் கில் (கேப்டன்) . விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், அகிப் நபி, குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங்