கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீராங்கனை உள்ளிட்ட இந்திய மகளிர் அணி அறிவிப்பு

ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய ஆண்கள் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 8 அணிகளும், ஆடவர் தொடரில் 10 அணிகளும் பங்கேற்க உள்ளன.

இதற்கிடையே, ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய ஆண்கள் அணியை பிசிசிஐ முன்னரே அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.

இந்திய அணியின் விவரம் வருமாறு:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், விக்கெட் கீப்பர் ஜி.கமலினி, பாரதி புல்மாலி, ஸ்ரீசரணி, ரேணுகா சிங், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி ஷர்மா.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.