நியூசிலாந்து உடனான முதல் டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகள் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று மதியம் தொடங்கிய போட்டியில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனால் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் இறங்க உள்ளது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதின.
இதில் இந்தியா 96 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனால் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெறும் நம்பிக்கையில் களமிறங்குகிறது.