

இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்து வருகிறது.
முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றநிலையில், 2வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் 103 ரன்கள் இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணி 8.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.