கிரிக்கெட்

3-ஆவது டி20: இந்தியாவுக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

தொடர்ந்து களமிறங்கியவர்களில் சாம் கர்ரன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கியது. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.

இங்கிலாந்து பேட்டிங்:

டாஸ் தோற்று பேட்டிங் ஆட வந்து இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் நல்ல துவக்கம் கொடுத்தனர். பில் சால்ட் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 70 ரன்களை விளாச ஜாஸ் பட்லர் 21 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கியவர்களில் சாம் கர்ரன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக கேப்டன் ஹாரி ப்ரூக் 16 ரன்களுக்கும், ஜேக்கப் பெத்தெல் 13 ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிக்கொடுக்க டாம் பேன்டன் றன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது.

இந்தியா சார்பில் ஹர்ஷித் ராணா, ப்ரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.