கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் சி.எஸ்.கே. முன்னாள் வீரர் தீபக் சஹார்

தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. தீபக் சஹாரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மாலை மலர்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்றது.

இதில், சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் தீபக் சஹார் இருக்கும் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.