கிரிக்கெட்

IPL 2026 | சஞ்சு சாம்சனுக்கான ஜெர்சி நம்பரை வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்

முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் சஞ்சு சாம்சன் 11-வது நம்பர் ஜெர்ஸி அணிந்து விளையாட இருக்கிறார்.

மாலை மலர்

டி20 உலகக் கோப்பையில் கடைசி மூன்று போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் சஞ்சு சாம்சன். டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட காலமாக விளையாடிய சஞ்சு சாம்சன், இந்த சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். டி20 உலகக் கோப்பை ஃபார்மோடு வருவதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை வந்துள்ளார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் ஜெர்சி நம்பரை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. அவருக்கு 11-வது நம்பரை வழங்கியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் 11-வது நம்பர் ஜெர்ஸியுடன்தான் விளையாடினார். இந்திய அணியில் விளையாடும் போது 9-வது நம்பர் ஜெர்ஸியுடன் விளையாடுகிறார்.