முகேஷ் குமார்- ஆகாஷ் தீப் முகேஷ் குமார்- ஆகாஷ் தீப்
கிரிக்கெட்

DSP ஆகும் ஆகாஷ் தீப், முகேஷ் குமார்

பீகார் மாநில அரசு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரை டி.எஸ்.பி.யாக நியமனம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரை டி.எஸ்.பி.யாக (deputy superintendents of police) நியமனம் செய்ய பீகார் மாநில அரசு முதற்கட்ட பணிகளை செய்துள்ளது. மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களை பணிக்கு அமர்த்தும் கொள்கையின் கீழ் இந்த பதிகளை வழங்க இருக்கிறது.

உள்துறை அமைச்சகத்திற்கு பொது நிர்வாகத்துறை இது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளது. ஆகாஷ் தீப் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர். 2023-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

ஆகாஷ் தீப் ரோதாஸ் மாவட்டத்தை சேரந்தவர். 2024-ம ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

2022-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 19-வது ஆசிய கேமில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இருவரும் இடம் பிடித்திருந்தனர்.

ஆகாஷ் தீப் இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

முகேஷ் குமார்

முகேஷ் குமார் 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 17 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டும், டி20-யில் 20 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

முகமது சிராஜ்

இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஏற்கனவே டி.எஸ்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.