கிரிக்கெட்

100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீரர்: அக்‌சர் படேல் சாதனை

முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் அக்சர் படேல் 100 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

மான்செஸ்டரில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதன்பின், ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டை எட்டினார்.

டி20 போட்டியில் 100 விக்கெட்டை கைப்பற்றிய முதல் இந்திய சுழற்பந்து வீரர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்தார். ஒட்டுமொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் 4-வது இடம் அவருக்கு கிடைத்தது.

இந்தப் பட்டியலில் அர்ஷ்தீப்சிங் (134 விக்கெட்), பும்ரா (121), ஹர்திக் பாண்ட்யா (114) ஆகியோருக்கு அடுத்து அக்‌சர் படேலும் இணைந்தார்.