ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனயா பாங்கரை பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதித்த நிலையில், தென்ஆப்பிரிக்கா வீராங்கனை விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர். இவர் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது மகன் திடீரென ஆணாக இருந்து பெண்ணாக மாறினார். தனது பெயரை அனயா பாங்கர் என மாற்றிக் கொண்டார்.
இவர் சிறுவனாக இருந்தபோது கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் பெண்ணாக மாறிய நிலையிலும் கிரிக்கெட்டை தொடர்ந்தார்.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக்பாஷ் டி20 லீக் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அவருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு தென்ஆப்பிரிக்கா வீராங்கனை மரிசேன் காப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் இது கேலிக்கூத்தானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதை அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனயா சிறு வயதில் மும்பை இளையோர் கிரிக்கெட் அணியில் விளையாடினார். டாப் ஆர்டர் பேட்டராகவும், ஆல்-ரவுண்டராகவும் திகழந்தார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். 2023-ல் ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையைத் தொடங்கியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். பின்னர் 2026-ல் பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களிலும் நடைபெறும் மகளிர் சமூக அளவிலான மற்றும் 'பிரீமியர்' கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனாயாவிற்கு (Anaya) 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' இப்போது அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் நுழைவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருந்தாலும், எந்தவொரு அணியிலும் தனக்கு இடம் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
போட்டித்தன்மை வாய்ந்த கிரிக்கெட்டிற்குத் திரும்புவதிலும், களத்தில் தனது திறமையை நிரூபிப்பதிலுமே அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.