இனிமேல் ஆர்யன் அல்ல... அனயா... பெண்ணாக மாறிய சஞ்சய் பாங்கர் மகன்

ஹார்மோன் மாற்று சிகிச்சையால் (hormone replacement therapy) ஒரு பெண்ணாக மாறியதில், என்னுடைய உடல் கடுயைாக மாறிவிட்டது.என்னுடைய தடகள விளையாட்டு திறன்களை இழந்து வருகிறேன்.
இனிமேல் ஆர்யன் அல்ல... அனயா... பெண்ணாக மாறிய சஞ்சய் பாங்கர் மகன்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர். இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது மகன் ஆர்யன். இவரும் கிரிக்கெட் வீரர்தான். இவர் கடந்த 9 மாதங்களில் ஆணாக இருந்து பெண்ணாக (hormonal transformation journey) மாறியுள்ளார். தற்போது தனது பெயரை ஆர்யன் என்பதை அனயா என்று மாற்றியுள்ளார்.

ஆர்யனாக இருந்து அனயாவாக மாறிய நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "தனது இளம் வயதில் இருந்து கிரிக்கெட் எனது வாழ்வில ஒரு பகுதியாக இருந்து வந்தது. எனது தந்தை இந்திய அணிக்காக விளையாடியது, பயிற்சியாளராக இருந்ததை பார்த்து எனக்குள் கனவு தொடங்கியது.

அவருடைய பேரார்வம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவர் விளையாட்டின் மீது காட்டியது எனக்கு உத்வேகமாக இருந்தது. கிரிக்கெட் என்னுடைய காதல், லட்சியம், எதிர்காலமாகியது.

ஒரு நாள், அவரைப் போலவே எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், எனது முழு வாழ்க்கையையும் எனது திறமைகளை மெருகேற்றுவதற்காகவே செலவிட்டுள்ளேன்.

நான் விரும்பிய கிரிக்கெட்டை விட்டுவிடுவதை நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், இங்கே நான் வலியான ரியாலிட்டியை எதிர்கொண்டு வருகிறேன். ஹார்மோன் மாற்று சிகிச்சையால் (hormone replacement therapy) ஒரு பெண்ணாக மாறியதில், என்னுடைய உடல் கடுயைாக மாறிவிட்டது.

என்னுடைய தடகள விளையாட்டு திறன்களை இழந்து வருகிறேன். நீண்ட நாட்களாக நான் விரும்பிய விளையாட்டு என்னை விட்டு நழுவி வருகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com