ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையே நியூ சண்டிகரில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது.
இதையடுத்து, நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளது.