ஷார்ஜா டெஸ்ட்
கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டெய்லர் சதத்தால் ஜிம்பாப்வே 339 ஆல்-அவுட்

ஆப்கானிஸ்தான் வீரர் நசீர் கான் மரூஃப்கில் 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டி நேற்று ஷார்ஜாவில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இன்னசென்ட் கையா, பென் கர்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இன்னசென்ட் கையா சிறப்பாக விளையாடினார். பென் கர்ரன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்னசென்ட் கையா 96-ல் அவுட்

2-வது விக்கெட்டுக்கு கையா உடன் பிரெண்டர் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னசென்ட் கையா 96 ரன்களில் வெளியேறினார்.

பிரெண்டன் டெய்லர் சிறப்பாக விளையாடி சதத்தை நோக்கி சென்றார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 5 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் சேர்த்திருந்தது. டெய்லர் 96 ரன்களுடனும், தஃபாட்ஜ்வா டிசிகா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பிரெண்டன் டெய்லர் சதம்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டெய்லர் 96 ரன்களை சதமாக மாற்றினார். தொடர்ந்து விளையாடிய அவர் 119 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 339 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

நசீர் கான் மரூஃப்கில் 7 விக்கெட்

ஆப்கானிஸ்தான் தரப்பில் நசீர் கான் மரூஃப்கில் 7 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT