அருந்ததி சௌத்ரி  
விளையாட்டு

காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் மேலும் ஒரு தங்கம்... அருந்ததி சௌத்ரி அசத்தல்

35 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

குத்துச் சண்டை

குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

நேற்று மாலை தொடங்கிய போட்டிகளில், பிரீத்தி பவார் மற்றும் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். சாக்ஷி சவுத்ரி 51 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.

அருந்ததி சவுத்ரி

இதையடுத்து மகளிர் 70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி தங்கம் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த தனது எதிராளியான சாண்டெல் ரீடை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

லவ்லினா

அதேபோல மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஆஸ்திரேலிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை தக்க வைத்தார்.

காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 11 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

நேற்று குத்துச்சண்டையில் மட்டும் 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதில் 6 வீராங்கனைகள் மற்றும் 4 வீரர்கள் ஆவார்கள்.