காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் பிரீத்தி பவார், லவ்லினா தங்கம் வென்றனர்

குத்துச் சண்டையில் இன்று மட்டும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
பிரீத்தி பவார்- லவ்லினா போர்கோஹெய்ன்
பிரீத்தி பவார்- லவ்லினா போர்கோஹெய்ன்
Published on

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். பளுதூக்குதல் போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு 1 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

குத்துச்சண்டையில் 10 பதக்கங்கள்

இன்று குத்துச்சண்டையில் மட்டும் 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதில் 6 வீராங்கனைகள் மற்றும் 4 வீரர்கள் ஆவார்கள்.

இன்று மதியம் நடைபெற்ற பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார், கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை எதிர்கொண்டார். இதில் பிரீத்தி பவார் 5-0 என வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

லவ்லினா போர்கோஹெய்ன்

இவரைத் தொடர்ந்து லவ்லினா போர்கோஹெய்ன் 75 கிலோ எடைப்பிரிவில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.

குத்துச் சண்டை போட்டியில் சாக்ஷி சவுத்ரி (51), ஜேஸ்மின் லம்போரியா (57), பிரியா கங்காஸ் (60), அருந்ததி சவுத்ரி (70) ஆகிய வீராங்கனைகள் இன்னும் பதக்கம் வெல்ல இருக்கின்றனர்.

அதேபோல் ஆண்கள் பிரிவில் ஜடுமணி சிங் (55), சச்சின் சிவாச் (60), அங்குஷ் பங்கல் (80), நரேந்தர் பெர்வால் (90+) ஆகியோர் பதக்கம் வெல்ல இருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com