2026ஆம் ஆண்டு 5வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் ஐச்சி மாகாணம் நகோயா நகரில் அக்டோபர் 18 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சோ்ந்த 3,000 போ் பங்கேற்றுள்ளனா். இந்த நிலையில் நீளம் தாண்டுதல் ஆடவர் பிரிவில் இந்தியா மேலும் ஒரு தங்கத்தை வென்றுள்ளது.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடைபெற்ற 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான நீளம் தாண்டுதல் இந்திய வீரர் நிஷாத் குமார் (T45/T46/T47) பிரிவில் 7.11 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா இரண்டாவது தங்கத்தை பெற்றுள்ளது.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளிலேயே இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளனர். பெண்களுக்கான 10 மீட்ரர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற மோனாஅகர்வால் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற அவானி லே காரா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.
இதன்மூலம், மொத்தம் ஆறு பதக்கங்களைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது