விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் கனடாவில் நடந்து வருகிறது.

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப், தன்யா ஹேமந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 2வது சுற்று போட்டிகள் நடந்தன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், அமெரிக்காவின் பெய்வன் ஜாங் உடன் மோதினார்.

ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஆகாஷ் காஷ்யப் முதல் செட்டை 22-20 என வென்றார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட அமெரிக்க வீராங்கனை அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று 23து சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் 11-21, 11-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ரிகோ கன்ஞ்சிடம் தோல்வி அடைந்தார்.

இதன்மூலம் கனடா ஓபன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனைகள் இரண்டாவது சுற்றுடன் வெளியேறினர்.