யூத் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு சிறு வயதின் தண்ணீர் மீது தனக்கிருந்த பயத்தை விவரித்துள்ளார்.
யூத் ஒலிம்பிக்ஸ் போட்டி செனகல் நாட்டின் தலைநகர் டகாரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த தினிதி தேசிங்கு (16), 100மீ ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார்.
சிறப்பாக செயல்பட்டு அவர் வெண்கல பதக்கம் வென்றார். குரோஷியா நாட்டை சேர்ந்த வீராங்கனை அனா போபானோவிச் தங்க பதக்கமும், நியூசிலாந்தின் அலைசா லாசன் வெள்ளி பதக்கமும் வென்றனர்.
யூத் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், இந்த யூத் ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். நடப்பு ஆண்டில் 3 முறை தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்தவர் தினிதி தேசிங்கு. நேற்று போட்டியில் வென்றபின் அவர் அளித்த பேட்டியில் சிறு வயதில் தண்ணீர் மீதான தனது பயம் குறித்து பேசியுள்ளார்.
ஆனால், இளம் வயதில் தண்ணீர் என்றாலே தினிதிக்கு பயம். இதனால், நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு பதிலாக பயந்து போய் நீச்சல் உடையுடன் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார். இதனை பதக்கம் வென்ற பின்னர் அளித்த பேட்டியின்போது அவர் வெளிப்படுத்தினார். என்று எனக்கு தெரியும் என கூறினார்.
அவர் கூறுகையில், "6 அல்லது 7 வயது இருக்கும்போது கோடை விடுமுறையில் நீச்சல் குளத்திற்கு நாங்கள் போனோம்.
ஆனால், எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை. அதனால், நீச்சலுடையுடன் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். உண்மையில் நான் பயந்து போய் இருந்தேன்.
அதன்பின்னர் நீச்சல் மீது எனக்கு எப்படி ஆர்வம் வந்தது? என உண்மையில், தெரியவில்லை. வருடங்கள் செல்ல செல்ல, அதனை நான் நேசிக்க தொடங்கினேன்" என்று தெரிவித்துள்ளார். இவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.