கும்பாபிஷேகம் 
வழிபாடு

தோழனூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் - ஸ்ரீ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

கற்பக விநாயகர் வழிபாடு, துவார, சாமிபிரதிஷ்டை, நான்காம் கால பூஜை, உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தோழனூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் புதிதாக புனர மைக்கப்பட்டு நூதன ஆலய புனருத்தாரண அஷ்டபந்த மஹா கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து கோவிலில் விக்னேஸ்வர பூஜை, முகூர்த்தக்கால் நடுதல், கங்கனம் கட்டுதல், தீர்த்தகுடம் எடுத்தல் முளைப்பாலிகை எடுத்தல் வாஸ்து சாந்தி பூஜை, பிரவேச பலி, முதற்கால பூஜை, துவார பூஜை, வேதி கார்ச்சனை, அக்னிகார்யம், முதலாம் கால யாகம், 108 மூலிகைகளால் யாகம் பூர்ணா ஹீதி, இரண்டாம்கால பூஜை, மூன்றாம் கால பூஜை, மங்கள இசை, கற்பக விநாயகர் வழிபாடு, துவார, சாமிபிரதிஷ்டை, நான்காம் கால பூஜை, உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் வேத பண்டிதர்கள் வேதம் ஓத கோவிலின் கலசத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்களை கொண்டு அபிஷேகம் செய்தும் மாரியம்மன் மற்றும் விநாயகருக்கு அபிஷேகம் செய்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் ஊர்கவுண்டர் ரவி, மந்திரி கவுண்டர் முத்தழகன், நிர்வாகிகள் ரங்கநாதன், அசோகன், சக்திவேல், ஜெயராமன் , மாதேஷ், கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.