புதிய முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு ராசி அதிபதி குருவின் பார்வை இருப்பதால் தொழில் மந்த நிலை மாறி சூடு பிடிக்கும். எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, அதிர்ஷ்டப் பணம் என உபரி வருமானம் கிடைக்கும்.பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். கடன் சுமை குறையும். பேச்சில் தெளிவு இருக்கும்.தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் திருமண முயற்சி வெற்றி தரும். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் மத நம்பிக்கை அதிகரிக்கும்.மனைவி, மக்கள், பேரன், பேத்திகள், சொத்து சுகம் என அனைத்து பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள்.சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் இருக்கும். இனம் புரியாத நோயின் தன்மை தாக்கம் சிகிச்சையில் சீராகும்.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். மகர ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியன் தனது மற்றொரு மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் மறைகிறார். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, முறையான ஆவணம் இல்லாத சொத்து, வில்லங்கம் ஜாமீன் பிரச்சனை, கடன் பிரச்சனை, நோய் தாக்கம், எதிரி தொல்லை, செய்வினைத் தாக்கம், பய உணர்வு, நிரந்தரமில்லாத உத்தியோகம், அடிக்கடி வேலையை மாற்றுவது, தாய் மாமன், உடன் பிறப்புகளால் மன வேதனை, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற பாதிப்புகள் விலகும்.ராசியை குரு பார்ப்பதால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப்புள்ளியாகும். வீண் விரயங்கள் குறையும். அதிக முதலீடு செய்ய வேண்டிய புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சில்லறை வணிகர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு மறு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் நடைபெறும். கூட்டுத் தொழில் புரிபவர்களிடம் சிறு மன பேதம் ஏற்படலாம்.சனிக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடவும்.
புது வசந்தம் பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் ஆன்ம பலம் பெருகும். பொது ஜனத் தொடர்பில் இருப்பவர்களின் ஆலோசனை மற்றும் கட்டளைக்கு பலர் அடி பணிவார்கள். அரசியல் ஆதாயம்,குல தெய்வ கடாட்சம் ,பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. பித்ருக்களின் நல் ஆசியால் நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் நிலவிய சிரமங்கள் அகலும் . புண்ணிய சேத்திரங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு அல்லது பொருள் விரயம் ஏற்படும்.அலங்காரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும் தனித்திறமை வெளிப்படும். வியாபாரத்தில் நிலவிய எதிர்ப்புகள் சீராகும்.உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஹோட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.சில தம்பதிகள் தொழில், வேலை நிமித்தமாக பிரிந்து வாழலாம். வீண் அலைச்சல் விரயத்தை தவிர்ப்பது நல்லது. நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். சனிக்கிழமை ஸ்ரீ வீரபத்திரரை வணங்கவும்.
ஆதாயம் நிறைந்த வாரம். ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று ராசியில் நிற்கும் சனி பகவானை பார்க்கிறார்.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும். ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். பய உணர்வு, நோய் தாக்கம், சொத்துக்களால் பயனற்ற நிலை, வறுமை, உறவுகளால் ஏற்பட்ட மன வேதனை போன்ற பாதிப்புகள் விலகும். அசையும், அசையாச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். எதிர்ப்புகள் இல்லாத நிலையை உண்டாகும். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரணச் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும்.வீடு, வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உள்ளது. சொத்துக்கள் விற்பனையில் நிலவிய தடைகள் அகலும். நியாயப்படி உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும்.மனக் கவலைகள் அகலும். கை,கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். சனிக்கிழமை ராகு வேளையில் காளியை வழிபடவும்.