வார ராசிபலன் 
வழிபாடு

2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

அஷ்டமச் சனியின் தாக்கம் சிறிது குறையும்.

சிம்மம்

எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும் வாரம். பொதுவாக லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் ஒரு ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் சாபங்களும் விலகும். தற்போது ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மூத்த சகோதரம் மற்றும் சித்தப்பா உங்களின் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். திருட்டுப் போன பொருள்கள் கிடைக்கும். புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். மாணவர்கள் தனித்திறமையால் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். அஷ்டமச் சனியின் தாக்கம் சிறிது குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். எதிர்காலத் தேவைக்காக திட்டமிடுவீர்கள். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும். 6.7.2026 அன்று காலை 9.57 முதல் 8.7.2026 அன்று மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கெட்ட சகவாசத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் மூன்றாம் நபர்களால் திடீர் பிரச்சினைகள் தலை தூக்கலாம். பங்குச் சந்தையில் கவனம் தேவை. தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல காரியமும் சித்தியாகும்.

கன்னி

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் வக்ரகதியில் விரயாதிபதி சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் தடை தாமதம் ஏற்படும். மத நம்பிக்கை குறையும், மத மாற்ற சிந்தனை மேலோங்கும். தந்தை, தந்தை வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.சுய ஜாதக தசா புத்தி அசுபத் தன்மையுடன் இயங்கினால் வீண் விரயங்கள் இழப்புகள் மருத்துவச் செலவுகள் வம்பு, வழக்கு, சிறை தண்டனை, விபத்து, கண்டம் அறுவை சிகிச்சை, தீராத கடன், தீர்க்க முடியாத நோய், கண் திருஷ்டி பாதிப்பு போன்ற அசுப பலன்கள் நடக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.8.7.2026 அன்று மாலை 4 மணி முதல் 10.7.2026 அன்று மாலை 6.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்கள் கணவரிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். வெள்ளிக்கிழமை வீட்டில் நெய் தீபம் ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படித்து வர பொருளாதார குற்றம் அகலும்.

துலாம்

தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.குருபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் வருமானமும், குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் போராடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை அதிகரிக்கும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். மனைவி வழிச் சொத்தை மாற்றி எழுதுவதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நிலவிய நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. திருமணத் தடை அகலும். பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து வீட்டிற்கு மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள். புதிய சொத்துக்கள் சேரும். வைத்தியம் பலன் தரும். 10.7.2026 அன்று மாலை 6.45க்கு சந்திராஷ்டம ஆரம்பிப்பதால் சிலருக்கு கண், பல் தொந்தரவு ஏற்படலாம். வீண் அலைச்சலால் மன சஞ்சலம் ஏற்படும். புதிய முயற்சிகள், பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

விருச்சிகம்

சகாயங்கள் மிகுந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் மற்றும் குருவின் பார்வையும் ராசியில் பதிகிறது. குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.உடல் தேஜஸ் பெரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிலையான, நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும். எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். பருவ வயதினருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெற்று நல்ல குடும்பம் அமையும். தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். தந்தை வழி உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசியல் ஆர்வம், ஆதாயம் உண்டு. புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனுகூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும். வீடு கட்ட, அல்லது புதிய தொழில் துவங்க கடன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றமும் லாபமும் மகிழ்ச்சியைத் தரும். திருமண வாய்ப்பு உடனே தேடி வரும் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிரத்யங்கரா தேவியை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406