இழந்ததை மீட்கும் வாரம். பொதுவாக ஒரு ஜாதகத்தில் லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பது தோஷ நிவர்த்தி ஆகும். தற்போது ராசி அதிபதி தன லாபாதிபதி புதனுடன் லாப ஸ்தானத்தில் நிற்பது சிம்ம ராசிக்கு இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டுத் தரும் காலமாகும். தொழிலில் புதுமை புகுத்தி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுய ஜாதக பரிசீலனை செய்த பிறகு புதிய தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். நண்பர்களுடன் ஏற்பட்ட விரிசல் சீராகி ஆதாயம் உண்டாகும். வியாதிகள் குறைந்து நலமடைவீர்கள். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு விலகி நல்ல புரிதல் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் நன்மை தரும். புதிய பதவிகளால் மதிப்பு, கவுரவம் கூடும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனையால் எதிர்கால கல்வி பற்றிய நல்ல முடிவு கிடைக்கும். வியாழக்கிழமை சித்தர்களை வழிபடுவது நல்லது.
காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும் வாரம்.லாப ஸ்தானத்தில் குரு சுக்ரன் சேர்க்கை உள்ளது. இது கன்னி ராசிக்கு பொற்காலம் என்று கூறும் வகையில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காலமாகும். புதிய முன்னேற்றம் உண்டாகும். உடலில் புத்தொளியும், பொலிவும் உண்டாகும். கட்டுப்பாடற்ற சுக வாழ்க்கை கிடைக்கும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.தன வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம், நல்ல உத்தியோகம், வீடு, வாகனம், திருமணம், புத்திரப்பேறு, பொருளாதார முன்னேற்றம் என உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். போட்டி பொறாமை குறையும். கடன் பிரச்சனைகள் தீரும். அரசியல் வெற்றி, அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பிறருக்கு கட்டளையிடும் பெரிய பதவிகள் தேடி வரும். உயர் கல்வி பயில்பவர்கள் வெற்றி பெறுவார்கள். கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். தினமும் கற்பக விநாயகரை வழிபடவும்.
திருப்திகரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் 10ம் மிடமான தொழில் ஸ்தானத்தில் உள்ள உச்சம் பெற்ற குருவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். தொழிலை தொடர்ந்து நடத்தலாமா? இழுத்து மூடி விட்டு செல்லமா என்று கவலையுடன் இருந்தவர்களுக்கு தொழிலில் நல்ல திருப்புமுனை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். மனகுழப்பம் நீங்கும். தொழில், உத்தியோகத்தில் பொறுமை, கடமை உணர்வு அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். பூர்வீகச் சொத்து தொடர்பாக சித்தப்பாவுடன் பேச்சு வார்த்தை நடக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். திருமணத் தடை அகலும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை சேரும். கோர்ட், கேஸ் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். புனித யாத்திரைகள் செல்வீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் உங்களை வழி நடத்தும். பாக்கிய பலன்களை அதிகரிக்க மகாலட்சுமியை வழிபடவும்.
பாக்கிய பலன்கள் மிளிரும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இதுவரை உங்கள் வாழ்வில் தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் உங்களை தேடிவரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். வாக்குவன்மையால் நன்மை பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். வேலையில் நிலவிய டென்சன் குறையும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். சிலரின் மறு மண முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்தில் நிலவிய சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு செல்வாக்கு உள்ள அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். பெண்களுக்கு கருப்பை நோய் பாதிப்பு குறையும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. மாணவர்களுக்கு உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். உடன் பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும்.நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது.கடன் தொகை வெகுவாக குறையும். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.