வழிபாடு

2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

மாணவர்களுக்கு போட்டி, பந்தயம், தேர்வில் அமோக வெற்றி உண்டு.

தனுசு

கடன் சார்ந்த விஷயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி குருவும் 6,11-ம் சுக்கிரனும் சம சப்தம ஸ்தானத்தில் இணைந்து ராசியை பார்க்கி றார்கள். பெண்களுக்கு சிறப்பான உயர்வான காலம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய வழக்கு விசாரணைகள் மீண்டும் தலை தூக்கும். திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு. சகோதரரிடம் இணக்கமற்ற சூழ்நிலை ஏற்படும். உஷ்ணம் தொடர்பான சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.

சிலருக்கு பொருளாதார பற்றாக்குறையை சமன் செய்ய கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கும். கடன் பிரச்சினை அதிகரிக்கலாம். வட்டித் தொழில், ரியல் எஸ்டேட், ஏஜென்ஸி தொழில் புரிபவர்களுக்கு பணப்பரிவர்த்தனையில் தாமதங்கள் ஏற்படலாம். அடுத்தவர்களுக்காக கடன் படுதல், கொடுத்த பணம் திரும்பி வராது போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படலாம். திருமண முயற்சி நிறைவேறும். தேக நலனில் கவனம் தேவை. மாணவர்களுக்கு போட்டி, பந்தயம், தேர்வில் அமோக வெற்றி உண்டு. தயிர்சாதம் தானம் வழங்கவும்.

மகரம்

எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகும் வாரம். ராசிக்கு 4-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றுள்ளார். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களை சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும். சிலர் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்வார்கள். இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் கிடைக்கப் போகிறது. வேற்று இன மத நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சாதகமாகும்.

தொழில் உத்தியோக நிமித்தமாக இடப் பெயர்ச்சி செய்ய நேரும். தொழிலால் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். சிலருக்கு கோட்சார ராகு கேதுவால் திருமண முயற்சி தள்ளிப்போகும். மாணவர்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க கடின முயற்சி செய்ய வேண்டும். சிலரின் மறுமண முயற்சி சித்திக்கும். தங்கம் வாங்கும் யோகம் உள்ளது. மருத்துவ உதவியில் குழந்தை பிறக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு தண்ணீருடன் உணவு தானம் வழங்கவும்.

கும்பம்

நன்மையும் தீமையும் கலந்த வாரம். தன லாப அதிபதி குரு ராசியில் உள்ள ராகுவை பார்ப்பதால் தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும் உண்டாகும். சதா சர்வ காலமும் குடும்பம், தொழில் பற்றி சிந்திப்பதும் செயல்படுவதுமாகவே இருப்பீர்கள். முயற்சியில் வெற்றியை காண்பது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கும். உயர் கல்வி முயற்சி கை கூடும். வெளிநாட்டு வேலை முயற்சி பலன்தரும். பொருளாதார நெருக்கடி குறையும். பெண்களுக்கு தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் உபரி பணத்தை புதிய சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். சிலருக்கு மனைவி மூலம் சொத்துகள் கிடைக்கும். அடமான சொத்துக்கள் மீட்க தேவையான நிதி உதவி கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். பெண்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மகான்களின் தரிசனத்தால் ஞான வழியில் மனம் சென்று அமைதியாகும்.

மீனம்

இன்னல்கள் நீங்கும் வாரம். ஜென்மச் சனியால் வருமானம் குறைந்த நிலை மாறும். கொடுக்கல் வாங்கல், வரவு செலவில் நாணயத்தை காப்பாற்ற முடியும். சரளமான பொருள் வரவால் தொழில், வாழ்க்கை இரண்டிலும் திருப்தியான பலனை அடையலாம். விரயமும், துயரமுமான நிலை மாறும். கொள்கை, கோட்பாடுடன் செயல்படுவீர்கள். அரசு தனியார் ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும், விற்கும் விசயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை தரும் இடப்பெயர்ச்சிகள் நடக்கும். திருமணத் தடை அகலும். வாழ்க்கை துணையை பிரிந்தவர்களுக்கு மறு விவாகம் நடக்கும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. குலதெய்வ பிரார்த்தனை மற்றும் பித்ருகள் சாந்தி பூஜைகள் நடத்த உகந்த காலம். மீன்களுக்கு பொரியிட பொருளாதார தடைகள் அகலும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406