மேஷம்
லட்சியத்தை அடையும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். கடந்த காலம் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். குணமேன்மை, செயல்திறன் ஆகியவற்றின் மூலம் வாழ்வாதாரம் உயரும். தற்போது விரயச்சனி நடப்பதாலும் சுக ஸ்தானத்தை குரு நெருங்குவதாலும் எதையும் யோசிக்காமல் சொத்து வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும்.
அலைச்சலும், அசதியுமான உள்ளுர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும். பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கணவன் மனைவி உறவில் தோன்றிய விரிசல் மறையும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குடும்ப விழாக்கள் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்வதால் மனம் சந்தோஷமும் நிம்மதியும் அடையும். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாழைப்பழம் படைத்து முருகனை வழிபடுவதால் நினைத்தது கைகூடும்.
ரிஷபம்
குதூகலமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி தனஸ்தானத்தில் நிற்கும் குருவுடன் சேர்க்கை பெறுகிறார். சிந்தனைகள் பெருகும். இதுவரை சாதிக்க முடியாத பல காரியங்களை சாதித்து முடிப்பீர்கள். காரியத் தடை நீங்கி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்புள்ளது. வியாபாரத்திற்கு தேவையான வங்கிக் கடன் அல்லது வீடு வாகனக் கடன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.திருமணத் தடை அகலும்.
புத்திரப் பேறு கிடைக்கும். புதிய எதிர்பாலின நட்பு மனதில் குதூகலத்தை அதிகரிக்கும். வரவிற்கு எந்த குறையும் இருக்காது. கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. சிலர் இது வரை ஒத்தி வைத்த கண் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல நேரும். படித்து முடித்தவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வரும். வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் படைத்து மகாலட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
சாதகமான வாரம்.ராசியில் குரு சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. கொடுக்கல், வாங்கல் சீராகும். அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் புரிபவர்களுக்கு நன்மைகள் கூடுதலாகும். இழந்த பதவிகள் கிடைக்கும். புதிய பதவிகளால் மதிப்பு, கவுரவம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். வரவு வந்தாலும் செலவும் கூடும். கைப் பணம் கரையும். சிலர் புதிய சொத்து, வாகனம் வாங்கலாம்.
குடும்ப நலனுக்காக ஆன்மீக தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். தம்பதிகளின் உறவில் அந்நியோன்யம் நீடிக்கும். செலவை குறைத்து சேமிப்பை உயர்த்த ஒளிமயான வாழ்வு அமையும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன் அமையும். மாணவ மாணவிகளுக்கு நல்ல நட்பால் முன்னேற்றம் நிலவும். 10.5.2026 அன்று பகல் 12.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நேரம் காலம் பார்த்துச் செய்வது நல்லது. பனிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். புதன்கிழமை பச்சை பயிறு சுண்டல் தானம் வழங்கவும்.
கடகம்
துன்பங்கள் குறையும் வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. தனித்த அடையாளத்துடன் பிறருக்கு முன் மாதிரியாக செயல்படுவீர்கள். வாக்கு வன்மை பெருகும்.பதவி உயர்வு, பணி மாற்றம் ஏற்படலாம். இழுபறியாக இருந்த வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். வட்டி தொழில், ரியல் எஸ்டேட், ஏஜென்சி தொழில் புரிபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான விவகாரங்கள் தடை தாமதமானாலும் நினைத்தபடி சாதகமாக நிறைவேறும்.
குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். திருமண முயற்சி வெற்றி தரும். 10.5.2026 அன்று பகல் 12.13 முதல் 12.5.2026 அன்று இரவு 7.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைப்பதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாலையோரம் வசிப்பவர்களுக்கு நீர் மோர் தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406