தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள ரோணிப்பட்டியில் விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி மேளதாளங்கள் முழங்க பால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு விநாயகர், மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.