திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆனி மாதசஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி, பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது. இதில் முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம், பால், தயிர், தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல பல்லடம் காந்தி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், பொன்காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.