திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வந்தது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமியை கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்துக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்ய மகாசாந்தி ஹோமம், சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம், அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பித்தனர். அதன் பிறகு உற்சவர்களுக்கு தங்கக் கவசங்கள் அணிவித்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
மாலை சஹஸ்ர தீபலங்கார சேவையின்போது உற்சவர்கள் தங்கக் கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இத்துடன் 3 நாள் ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது.