ஆன்மிகம்

செல்வ வளம் கொழிக்கும் செவ்வாயில்- செந்தில்நாதன் வழிபாடு!

செவ்வாயில் முருகனை வழிபட்டால் செல்வம், வேலை, வழக்கு தடைகள் நீங்கும்.

சஷ்டி, கிருத்திகை மட்டுமல்லாமல் வாரம் வாரம் வரும் செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பாகும்.

மகத்துவம்:

செவ்வாய் கிரகத்திற்கான அதிபதியாக முருகப்பெருமான் விளங்குகிறார். ஆகவே இந்நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது செவ்வாய் தோஷம் விலகுவதோடு, எதிர்ப்புகள் அகலும்.

செவ்வாய் என்றாலே அது மங்கலத்தைக் குறிக்கும், அவ்வகையில் அன்று முருகனை வழிபடுவது, வாழ்வில் சகல செல்வங்களும் ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நாளில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை பாடி முருகனை வழிபடுவது செய்வது சிறப்பு. காலை அல்லது மாலை வேளைகளில் முருகன் கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் பங்குகொண்டு முருகனை தரிசித்து மகிழலாம்.

மெய்நிகர் சேயோன்:

செவ்வாய் கிரகம் உடலோடும் மண்ணோடும் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். வேலைவாய்ப்பிற்கும் செவ்வாயின் தாக்கமே காரணியாக உண்டு. ஆகவே அரசாங்க வேலை வேண்டி அதற்காக முழு வீச்சில் படித்துவருபவர்களும், இன்றய நாளில் முருக வழிபாடு செய்வது நலம் தரும.

பூமி சம்பந்தப்பட்ட வழக்கு, சண்டை சச்சரவு, இழுபறி, மன அழுத்தம், மனச்சோர்வு, எந்த வேலையையும் செய்யத் தோண்றாதபடி மந்த நிலை போன்ற தாக்கத்திலிருந்து விடுபட இந்த நாளின் முருக வழிபாடு வழிவகுக்கும்.

சிறப்பு:

* வாழ்க்கையில் உள்ள தடைகள் மற்றும் எதிர்ப்புகள் நீங்கும்.

* கடன் பிரச்சினைகள் குறையும் என நம்பப்படுகிறது.

* திருமணத் தடை நீங்கி, நல்ல துணை கிடைக்கும்.

* குழந்தைப்பேறு பாக்கியம் கிட்டும்.

வழிபடும் முறை:

அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிய வேண்டும். வீட்டிலோ அல்லது கோவிலிலோ முருகப் பெருமானுக்கு:

-சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற மலர்கள் சாற்றலாம்.

-செம்பருத்தி, அரளி, ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

-பால், பஞ்சாமிர்தம், தேன் அபிஷேகம் செய்யலாம்.

-"ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம்.

-கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.

"வேலுண்டு வினையில்லை,

மயிலுண்டு பயமில்லை,

குகனுண்டு குறையில்லை, கந்த வேலே!"