வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு.
முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பலன் பெறுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
உற்சாகம் கூடும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். உடன்பிறப்புகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனவரவில் தடையுண்டு.
பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். சொத்துகள் வாங்க அல்லது விற்க எடுத்த முயற்சி கைகூடும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சிக்குரிய செய்தி உண்டு. மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
பாராட்டும், புகழும் கூடும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பொருளதார நிலை உயரும். பயணங்களில் பிரபலங்களை சந்திப்பீர்கள்.
புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
வருமானம் உயரும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். முன்னோர் சொத்துகளில் லாபம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.