ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு எதிரிகள் விலகும் நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். வெளியூரிலிருந்து வியக்கும் தகவல் வரும். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்

எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்

சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்ய இயலும்.

கடகம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையும். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்

நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கன்னி

எதிரிகள் விலகும் நாள். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபார முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர்.

துலாம்

வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள். பணிபுரியும் இடத்தில் பாராட்டு பெறுவீர்கள். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்

வருமானம் திருப்தி தரும் நாள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

தனுசு

உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். அதிகாலையிலேயே சுபச்செய்தியொன்று வந்து சேரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

மகரம்

புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறா விட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும்.

கும்பம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.

மீனம்

யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு.